
ரூ.500 கோடி வசூலைக் கடந்த ஜெயிலர்
அதன்பின் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.125 கோடி வசூலைக் கூடுதலாகக் கடந்து தற்போது ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் மொத்தமாகவே அவ்வளவு வசூலைத்தான் அள்ளியது. ஆனால், "ஜெயிலர்" படம் அந்த வசூலை 11 நாட்களில் முறியடித்துள்ளது.
இந்தப் படத்துடன் சேர்த்து தமிழ் சினிமாவில் முதல் முறையாக இரண்டு 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்தவர் என்ற சாதனையை ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த "2.0" படம் தமிழ் சினிமாவின் முதல் ரூ.500 கோடி படமாக அமைந்தது.
"ஜெயிலர்" படத்தின் இந்த புதிய வசூல் சாதனையை அடுத்து விஜய் நடிக்கும் "லியோ" முறியடிக்கப் போகிறதா, அல்லது கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2" முறியடிக்கப் போகிறதா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…