ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம்
பிப் 14, 2026
Advertisement
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் "ஜெயிலர் 2" படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யாபாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத 12ம் தேதியில் முதலில் திட்டமிட்டிருந்தனர். ஏனெனில், ஜெயிலர், 2023ம் ஆண்டில் ஆகஸ்ட் 10ம் தேதியன்று திரைக்கு வந்து வெற்றி பெற்றதால் இதனை செண்டிமெண்ட் ஆக கருதி ஜெயிலர் 2ம் பாகத்தை ஆகஸ்ட்டில் திட்டமிட்டிருந்தனர்.
தற்போது ஜெயிலர் 2 படத்தின் பணிகள் விரைவில் நிறைவு பெற்றுவிடும் காரணத்தால் நீண்ட மாதங்கள் ஏன் வைத்திருக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம் என்கிற பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…