
தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ்
பிப் 14, 2026
Advertisement
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்தவர் நடிகர் ரியோ ராஜ். ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் அவருக்கு பெயரை பெற்று தந்தன. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது நடிகர் அவதாரத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்கிறார் ரியோ ராஜ். விரைவில் "ரியோ ராஜ் புரொடக்ஷன்ஸ்" என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்குகிறாராம். தனது முதல் தயாரிப்பு படத்தில் கதாநாயகனாக ரியோ ராஜ் நடித்த ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வருண் என்பவர் நடிக்கவுள்ளார். விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
Tags
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!