
அண்ணாத்த டீசரைக் கடந்த ஜெய் பீம் டீசர்
ஒரு நாளைக்குள்ளாகவே "அண்ணாத்த" டீசரின் பார்வைகளை "ஜெய் பீம்" டீசர் கடந்துவிட்டது. "அண்ணாத்த" டீசர் தற்போது 61 லட்சம் பார்வைகளுடன், 4 லட்சம் லைக்குகளுடன் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது.
"ஜெய் பீம்" டீசர் 65 லட்சம் பார்வைகளுடன், 2 லட்சம் லைக்குகளுடன் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. ரஜினிகாந்த் பட டீசரை விட சூர்யா பட டீசர் முந்துவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.
"ஜெப் பீம்" படம் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வக்கீலின் கதை என்பதால் இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. "அண்ணாத்த" படம் வழக்கமான மசாலாப் படம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!