
கைதிக்குப் பிறகு இருந்தே காத்திருக்கிறேன் - நாகார்ஜூனா
தெலுங்கிலிருந்து நிறைய டப்பிங் படங்கள் தமிழில் வெளியாகும். அப்படி வெற்றி பெற்றவர்களில் சிரஞ்சீவி, நாகர்ஜூனா படங்கள் அதிகம். நாகார்ஜூனா தெலுங்கில் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வந்த "இதயத்தை திருடாதே, உதயம்" ஆகிய படங்கள் இங்கு 175 நாட்கள் ஓடிய படங்கள். அதன்பின் தமிழில் "ரட்சகன், தோழா" என இரண்டு நேரடிப் படங்களில் நடித்தார் நாகார்ஜூனா.
தற்போது தனுஷ் நடித்து வரும் இரு மொழிப் படமான "குபேரா" படத்தில் நாகார்ஜூனா நடித்து வருகிறார். அதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாகார்ஜூனாவின் பிறந்தநாளான நேற்று வெளியானது.
“நன்றி.. லோகி. "கைதி" படத்திலிருந்தே உங்களுடன் பணி புரிய காத்திருக்கிறேன். நமது பயணத்திற்காக உற்சாகமாக இருக்கிறேன். "தலைவர்" உடன் திரையைப் பகிர்ந்து கொள்ளவும் எதிர்நோக்கி உள்ளேன்,” என "கூலி" படத்தில் நடிப்பது குறித்து நாகார்ஜூனா குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!