
தக் லைப் - கடும் ஜுரத்தில் சண்டைக் காட்சியில் நடித்த சிம்பு
காலை முதல் நள்ளிரவு வரை இரண்டு நாட்கள் தொடர்ந்து அதில் சிம்பு நடித்துள்ளார். அந்த நாட்களில் சிம்புக்கு கடும் ஜுரம் இருந்ததாம். இருந்தாலும் அந்த நாட்களில் படப்பிடிப்பு நடத்தியே ஆக வேண்டும் என்பதால் தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தாராம். "விக்ரம்" படத்தில் கமல்ஹாசன் நடித்த இடைவேளைக் காட்சி சண்டையில் பயன்படுத்தப்பட்ட "மோகோபாட்" ரோபோட்டிக் கேமரா கொண்டு அந்தக் காட்சியை படம் பிடித்துள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். படத்தில் உள்ள ஹைலைட்டான சண்டைக் காட்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!