
வடிவேலுவின் வசனத் தலைப்பு - யோகிபாபு, சதீஷ் செய்வது சரியா ?
சமீபத்தில் "நாய் சேகர்" படத்தின் தலைப்பு ஒரு சர்ச்சையை உருவாக்கியது. "தலைநகரம்" படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர் தான் "நாய் சேகர்". அந்தக் கதாபாத்திரப் பெயருக்கு படத்தின் இயக்குனர் சுராஜ், அந்தக் கதாபாத்திரத்தை இன்றளவும் பேச வைக்கும் வடிவேலு ஆகியோர்தான் சொந்தக்காரர்கள்.
ஆனால், அந்த "நாய் சேகர்" என்ற பெயரை காமெடி நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு வைத்துவிட்டார்கள். அடுத்ததாக "பிரண்ட்ஸ்" படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான "கான்ட்ராக்டர் நேசமணி" என்ற கதாபாத்திரப் பெயரை மற்றொரு காமெடி நடிகரான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு வைத்துள்ளார்கள்.
சதீஷ், யோகி பாபு இருவருமே கடந்த சில வருடங்களாக காமெடி நடிகர்களாக ஓரளவிற்குப் பெயர் வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு முன்பு நடித்த படங்களின் கதாபாத்திரப் பெயர்களை வைக்காமல் சீனியர் காமெடி நடிகரான வடிவேலு நடித்த கதாபாத்திரப் பெயர்களை வைப்பது சரியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படியென்றால் சதீஷ், யோகி பாபு இருவரும் நடித்த படங்களின் கதாபாத்திரப் பெயர்கள் மக்கள் மனதில் பதியவில்லை என்றுதானே அர்த்தம் என கோலிவுட்டில் கேட்கிறார்கள்.
வடிவேலுவின் கதாபாத்திரப் பெயர்கள் இரண்டு புதிய படங்களுக்கு வைக்கப்பட்டுவிட்டது. இந்நேரம் மற்ற கதாபாத்திரப் பெயர்களை தங்களது புதிய படங்களுக்காக எத்தனை பேர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்களோ ?.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!