யாஷிகா ஆனந்த் - அஜித் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி காதலா...?
மே 29, 2023
Advertisement
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அஜித்தின் மைத்துனரான இவர் ‛காதல் வைரஸ்" படத்தில் நாயகனாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். ஹீரோவாக போராடி வரும் இவர், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்கு பின் ஓரளவுக்கு பேசப்படும் நடிகராகி உள்ளார். அடுத்து மோகன் ஜி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக உள்ளார். இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
யாஷிகா ஆனந்த் தனக்கு முத்தமிடும் போட்டோவை பகிர்ந்துள்ள ரிச்சர்ட் அதற்கு கேப்ஷனாக ‛‛சில இடங்களில் சூரியன் நம்மை முத்தமிடும் போது..."" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் முத்தமிட்ட பின் என யாஷிகா உடன் நெருக்கமாக உள்ள மற்றொரு போட்டோவையும் பகிர்ந்துள்ளார். இதை வைத்து இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது. இதுதொடர்பாக யாஷிகாவை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!