
ஷங்கரின் இளைய மகள் நடிகை அதிதிக்கு திருமணமா? - உண்மை என்ன
இந்நிலையில் ஷங்கர் தனது மனைவி உடன், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்தார். அப்போது தனது மகளின் திருமண வரவேற்புக்கு வரும் படி அழைப்பு விடுத்து, சினிமாவில் தன்னை அறிமுகம் செய்தவர் என்பதால் அவரிடம் ஆசியும் பெற்றார். இதையடுத்து ஷங்கரின் இளைய மகளும், தற்போது கார்த்தி உடன் விருமன் படத்தில் நடித்து இருப்பவருமான அதிதிக்கு தான் திருமணம் நடக்க போகிறது. அதற்கான அழைப்பிதழை தான் ஷங்கர் வழங்கினார் என செய்திகள் பரவின.
|
ஆனால் உண்மையில் இந்த திருமண அழைப்பு அதிதிக்கானது அல்ல. மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்த சமயம் கொரோனா காலக்கட்டம் என்பதால் அப்போது திருமண வரவேற்பு நடத்தவில்லை. தற்போது திரையுலகினர், நண்பர்களை அழைத்து திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை தான் கே.டி.குஞ்சுமோனிடம் ஷங்கர் வழங்கினார். ஆனால் அதற்குள் அதிதிக்கு திருமணம் என செய்தி பரவி விட்டது என ஷங்கர் தரப்பில் விசாரித்தபோது இந்த தகவல் கிடைத்தது.
ஐஸ்வர்யா - ரோஹித்தின் திருமண வரவேற்பு வருகிற மே 1ல் சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா மண்டபத்தில் நடக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!