
வாடிவாசல் டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல்
பலருக்கும் எழுந்த சந்தேகத்துக்கிடையில் இந்த வருடப் பொங்கல் சமயத்தில் வெற்றிமாறன், சூர்யாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து "அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது," என்ற அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் தாணு.
அதன்பின் மார்ச் மாதத்தில் வெற்றிமானுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பாடல் பதிவுகள் ஆரம்பமாகிவிட்டது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
இப்போது "வாடிவாசல்" படம் டிராப் ஆகிறது என மீண்டும் ஒரு தகவல் பரவி வருகிறது. சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களில் அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவிக்கும் வரை எதுவும் உண்மையில்லை என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!