
தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன முத்த மழை
குறிப்பாக "முத்த மழை" பாடல் வெளியீட்டிற்கு முன்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் பாடகி தீ பாடலைப் பாடியிருக்க, இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி, அந்தப் பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக பாடி வரவேற்பைப் பெற்றார். தெலுங்கு, ஹிந்தியில் சின்மயில் அந்தப் பாடலைப் படத்தில் பாடியுள்ளார். தமிழிலும் சின்மயியை பாட வைத்திருக்கலாம் என்ற சர்ச்சையும் எழுந்தது.
ஆனால், கடைசியில் படத்தில் யாருடைய பாடலும் இல்லாமல், "முத்த மழை" பாடல் இடம் பெறவேயில்லை. படத்தில் அந்தப் பாடல் இல்லாதாது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இவ்வளவு பரபரப்பு எழுந்த பிறகும் பட வெளியீடு வரை அதை படக்குழுவினர் மறைத்துள்ளார்கள். "தக் லைப்" படத்தில் காட்சிகளில் முத்தமும் இருக்கிறது, மழையும் இருக்கிறது. ஆனால், "முத்த மழை" பாடல்தான் இல்லாமல் போய்விட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!