காதல் கிசுகிசுவில் சிக்கிய சந்தீப் கிஷன் - ரெஜினா
டிச 14, 2022
Advertisement
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர்கள் நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் நடிகை ரெஜினா. நேற்று தனது 32வது பிறந்தநாளை ரெஜினா கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தீப் கிஷன், அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா. லவ் யூ. எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும் . மகிழ்ச்சியாக இரு. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்"" என்று குறிப்பிட்டார். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரவி வருகிறது.
மாநகரம் படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே, சந்தீப் கிஷனும், ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஐதராபாத்தில் அடிக்கடி டேட்டிங் செய்கிறார்கள் என்று தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. என்றாலும் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!