
விஜய் 67 படத்தில் காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியா?
ஜன 31, 2023
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 67வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் இந்த படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியாகியுள்ளது என்றாலும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய்தத், பிரித்விராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கும் நிலையில், காந்தாரா படத்தின் நாயகனான ரிஷப் ஷெட்டியும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில், விஜய் 67வது படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், தன்னைக் அப்படத்தில் நடிப்பதற்கு யாரும் அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விஜய் 67வது படத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பதாக வெளியான செய்திகள் வதந்தி என்று தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!