
சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா
அதே சமயம் இதுபோன்ற எந்த ஒரு பரபரப்பு அறிவிப்புகளும் இல்லாமல் சத்தமின்றி ஒரு பாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார் ஜோதிகா. படத்தின் பெயர் "ஸ்ரீ". இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தற்போதுதான் இந்த தகவலையே வெளியிட்டுள்ளார் ஜோதிகா. இந்த படத்தை துஷார் என்பவர் இயக்க, ராஜ்குமார் ராவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜோதிகா கூறும்போது, “இதுவரை பணியாற்றிய சிறந்த படக்குழுவில் இதுவும் ஒன்று. பாலிவுட்டின் மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்ததை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இந்தப் படக்குழுவினரிடம் இருந்து ஒரு நடிகையாக எதை எடுத்துக்கொண்டு போகிறேன் என்றால் அதுதான் "வளர்ச்சி"” என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவில் தனது கருத்தை பதிவிட்டுள்ள சூர்யா, “இந்த அற்புதமான பயணம் அனைத்து இதயங்களையும் வெல்லட்டும்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!