
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? நவம்பர் 5ல் ரிலீஸா?
ஆக 18, 2026
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த "ஜெயிலர் 2" படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீஸ் என முன்பே அறிவிப்பு வெளியாகிவிட்டது. அந்த படத்தை முடித்துவிட்டு "தர்மன்" படத்துக்கு சென்றுவிட்டார் ரஜினிகாந்த். பாடல் வெளியீட்டுவிழா, விளம்பர நிகழ்ச்சிகள், போஸ்ட் புரொடக்ஷன் என "ஜெயிலர் 2" படக்குழுவும் பிஸியாக இருக்கிறது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. அக்டோபர் 15க்கு பதில் நவம்பர் 5ல் வெளியாகலாம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. அதனால் அக்டோபர் 15ல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் புது தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. நவம்பர் 8ம் தேதி தீபாவளி என்பதால் அதை குறி வைத்து நவம்பர் 5ல் ரிலீஸ் செய்தால் இன்னும் வசூலை அள்ள வாய்ப்பு என்கிறார்கள் கோலிவுட்டில்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!