
பார்த்திபனின் இரவின் நிழல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மே 19, 2022
Advertisement
பார்த்திபன், வரலட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் இரவின் நிழல். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். உலக சினிமாவில் முதன்முறையாக ஒரே ஷாட்டில் உருவான நான் லீனியர் படமாக உருவாகி உள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை ஒரு போஸ்டரில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன். அதில் இரவின் நிழல் படத்தின் பாடல்கள் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், ஜூன் 24-ஆம் தேதி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதுபோன்ற முதல் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை நான் கால்களாய் நினைத்து வணங்குகிறேன் என அந்த போஸ்டரில் தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!