‛இரவின் நிழல் இசை வெளியீடு - பார்த்திபனின் மெகா திட்டம்
ஏப் 08, 2022
Advertisement
வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். ஒத்த செருப்பு படத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்து வியக்க வைத்தார். இதற்காக தேசிய விருதும் கிடைத்தது. இப்போது அடுத்த முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். ஒரே ஷாட்டில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மே 1ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த உள்ளார் பார்த்திபன். இதுபற்றி அவர் கூறுகையில், சென்னை தீவுத்திடலில் மே 1ல் இரவின் நிழல் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய அளவிலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இது என் பட இசை வெளியீடு என்பதை விட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எடுக்கும் விழா என்று சொல்லலாம். இசையில் அவர் செய்த சாதனையை கவுரவிக்கும் விழாவாகவும் இருக்கும்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!