
விக்ரம் பிரபு என்னை பார்த்து பயந்தார் : லால்
இப்பட அனுபவம் குறித்து லால் நம்மிடம் கூறுகையில், படப்பிடிப்பு ஒன்றுக்காக தற்போது அமெரிக்காவில் உள்ளேன். டாணாக்காரன் படத்திற்கு கிடைக்கும் விமர்சனங்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. மலையாளத்தில் அமைதியான போலீஸாக நடித்துள்ளேன். அந்த படம் எனக்கு விருதை பெற்று தந்தது. அதன்பின் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தேன். இயக்குனர் தமிழ் புதியவர் என்றாலும் படத்திற்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். இந்த குழுவோடு இணைந்து வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. விக்ரம் பிரபு படப்பிடிப்பில் என்னிடம் பயந்தே இருந்தார். மனுஷன் மிகவும் அமைதியானவர். தேவையின்றி எதும் பேச மாட்டார். நல்ல நல்ல படங்களில் நடித்து அவர் பெயர் பெற வாழ்த்துக்கள்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!