
கஜினி 2 பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல்
இந்நிலையில் 2005ம் ஆண்டில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் தான் இயக்கிய கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இது குறித்து அவர் கூறுகையில், கஜினி- 2 படத்தை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அந்த படத்தை தயாரிக்க உள்ளார். அதனால் அதற்கான சரியான நேரம் வரும்போது அப்படத்தை இயக்குவேன். அதோடு, கஜினி- 2 படத்தை தமிழ், ஹிந்தியில் ஒரே நேரத்தில் இயக்குவேன் என்கிறார் முருகதாஸ். கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!