
இன்று நேற்று நாளை 2 துவக்கம்
ஜன 18, 2021
Advertisement
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடித்து, 2015ல் வெளியாகி, வெற்றி பெற்ற படம் "இன்று நேற்று நாளை". இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்த தயாரிப்பாளர் சிவி.குமார், நேற்று படத்தை துவக்கினார். ஏற்கனவே நடித்த நடிகர்களுடன், இன்னும் புதியவர்கள் சிலர் இரண்டாம் பாகத்தில் இணைகின்றனர். ரவிக்குமாரின், கதை, திரைக்கதையை வைத்து அவரிடம் உதவியாளராக இருந்த கார்த்திக் பொன்ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசை. இது சிவி.குமாரின் 25வது படமாகும்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!