
இந்தியன் 3 - நேரடி ஓடிடி வெளியீடா?
அக் 03, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் "இந்தியன் 2". இந்தப் படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் மிகக் குறைவான வரவேற்பே கிடைத்தது. 500 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையைப் புரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வசூலும், வரவேற்பும் குறைந்தது திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
"இந்தியன் 2" படம் உருவாகும் போதே "இந்தியன் 3" படத்திற்கான படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இரண்டாம் பாகத்தை விடவும் மூன்றாம் பாகம் மிகவும் சிறப்பாக இருக்கும் என "இந்தியன் 2" வெளியீட்டிற்கு முன்பே கமல்ஹாசன் பேசியிருந்தார்.
"இந்தியன் 3" படத்தை மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியின் "தக் லைப்" படத்திற்குப் பின்னர் வெளியிடுவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது "இந்தியன் 3" படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிடும் முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மையான தகவலா என்பது தெரியவில்லை. தியேட்டர்களில் வெளியிட்டு "ரிஸ்க்" எடுக்காமல் ஓடிடியில் வெளியிடுவதே சிறந்த முடிவுதான் என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!