சென்னை அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு
மார் 09, 2023
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2" படப்பிடிப்பு தற்போது சென்னை அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள டச்சு கோட்டையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டு ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்று நடிக்கும் சண்டைக் காட்சிகள் அங்கு படமாகி வருகிறது.
நேற்று அங்கு படப்பிடிப்பு நடப்பதைக் கேள்விப்பட்டு ரசிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்தனர். படப்பிடிப்பு இடைவெளியில் கமல்ஹாசன் வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்தார். பலரும் எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
"இந்தியன் 2" படப்பிடிப்பு அங்கு ஒரு வாரம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. காஜல் அகர்வால் அப்படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும், எப்போது படம் பற்றிய அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்டைக் கொடுப்பார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!