
தயாரிப்பாளர் வி. ஏ. துரைக்கு உறுதியளித்த ரஜினிகாந்த்
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் எழுந்து உட்காரும் அளவிற்கு உடல்நலம் தேறியிருக்கிறார். ஆனால் தற்போது அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு நடிகர் சூர்யா ரூ 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக தகவல் வெளியானது. அதேபோல நடிகர் கருணாஸ் ரூ 50 ஆயிரம் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு "நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதிருங்கள். மொத்த செலவையும் நான் பார்த்து கொள்கிறேன். ஜெயிலர் படத்தை முடித்ததும் நேரில் வந்து பார்க்கிறேன்"" என உறுதி அளித்துள்ளாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!