இந்தியன் 2 - வில்லன் எஸ்.ஜே.சூர்யா வீட்டின் செலவு 8 கோடியா…
ஆக 21, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் "இந்தியன் 2". இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பையும், வசூலையும் குவிக்கவில்லை. ஓடிடி தளத்தில் வெளியான பின்பு இன்னும் அதிகமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. கடந்த வாரம் சில புதிய படங்கள் வந்ததால் மக்கள் அந்தப் படங்கள் பக்கம் தாவியதால் "இந்தியன் 2" பற்றிய கமெண்ட்கள் குறைய ஆரம்பித்தது.
இந்நிலையில் அதை மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறது படத்தில் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யா கொடுத்த ஒரு பேட்டி. அவரது காட்சிகள் இரண்டாம் பாகத்தில் குறைவாகவே இடம் பெற்றன. மூன்றாம் பாகத்தில் அவருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
சமீபத்தில் கொடுத்த அந்தப் பேட்டியில் படத்தில் தன்னுடைய வீடாகக் காட்டப்படும் "செட்" சுமார் 8 கோடி செலவில் உருவாக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறார். வில்லனுடைய வீட்டிற்கே 8 கோடி செலவா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதனால்தான் பட்ஜெட் எகிறிவிட்டதா உள்ளிட்ட பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!