உடல் நிலையில் முன்னேற்றம்: சூர்யா தகவல்
நவ 25, 2023
Advertisement
சூர்யா தற்போது நடித்து வரும் படம் "கங்குவா". மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் பான் இந்தியா படம். திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நடந்து வந்தது.
சண்டை காட்சி ஒன்றில் சூர்யா நடித்தபோது ரோப் கேமரா விழுந்து காயம் அடைந்தார். கேமரா விழுவதை பார்த்து அவர் விலகியதால் நூலிழையில் தப்பினார். ஆனாலும் தோள்பட்டையில் கேமரா உரசியபடி விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் சூர்யா தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பிற்கினிய நண்பர்கள் மற்றும் அன்பான ரசிகர்களே, நான் விரைவில் குணமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு நன்றி. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வருகிறேன். உங்களின் அன்புக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்"" என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!