
சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய மற்றுமொரு வெப் தொடர்
இந்த நிலையில் "கூச முனிசாமி வீரப்பன்" என்ற பெயரில் புதிய வெப் தொடர் தயாராகி உள்ளது. இதனை தீரன் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஷரத் ஜோஷி இயக்கி உள்ளார். மற்ற தொடர்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன வென்றால். வீரப்பனின் கதையை வீரப்பனே விவரிப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. வீரப்பன் தன் வாழ்க்கை பற்றிய பேசிய வீடியோ இதில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர வீரப்பன் வேட்டையில் பங்கேற்ற அதிகாரிகள், வீரப்பனுடன் இருந்தவர்கள், நக்கீரன் கோபால், சீமான், நடிகை ரோகினி உள்ளிட்டவர்கள் பேசி உள்ளனர். சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் நேரடி காட்சிகளும் இதில் இடம் பெறுகிறது. வருகிற 8ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!