இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை
டிச 17, 2024
இசையமைப்பாளர் இளையராஜா இந்திய சினிமாவில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாக அறிவித்தனர். இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கின்றார். இப்படத்தை கன்னெக்ட் மீடியா மற்றும் மெர்குரி என இரு நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்திற்கு "இளையராஜா" என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர்.
கடந்த சில வாரங்களாக இப்படம் கைவிடப்பட்டதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நெருங்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின் படி, இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்டு வரும் தாமதத்தால் இதன் படப்பிடிப்பை 2025ம் ஆண்டு, ஜூன் மாதத்திற்கு பிறகு துவங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!