
தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்
இந்நிலையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு சூதாட்டம் செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் என்னுடைய தவறை உணர்ந்தேன் . என்றாலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவறுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!