சிவராஜ்குமாரை காப்பி அடிக்கவில்லை : விக்ரம் பிரபு
நவ 04, 2023
Advertisement
விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்த "ரெய்டு" படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக படம் பற்றி விக்ரம் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
"டாணாக்காரன்" படத்திற்கு பிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது. ஏற்கெனவே "புலிகுத்தி பாண்டி" படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். "வெள்ளக்கார துரை" படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தற்போது நாங்கள் மூவரும் இணைந்திருக்கிறோம். இது சிவராஜ்குமார் நடித்த "தகரு" என்ற கன்னட படத்தின் ரீமேக். இதற்காக அந்த படத்தை பார்த்தேன். சிவராஜ்குமார் மாஸ் ஹீரோ என்பதால் அவர் ஸ்டைலில் நடித்திருந்தார். நான் எனக்கு ஏற்ற வகையில் அந்த கேரக்டரை மாற்றிக் கொண்டேன். எந்த விதத்திலும் அவரை காப்பி அடிக்கவில்லை. அடிக்கவும் முடியாது.
டாணாக்காரன் படத்திற்கு பிறகு போலீஸ் வேடங்களாகவே வந்தது. அதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். தமிழுக்காக சின்ன சின்ன மாற்றங்களை செய்திருக்கிறோம். கடைசியாக நடித்த "இறுகப்பற்று" படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!