நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல - சூரி
ஆக 09, 2022
Advertisement
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்" படம் ஆக., 12ல் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாய் நடந்தது. அப்போது அங்கு பேசிய இந்த படத்தில் நடித்த சூரி, ,‛‛ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது"" என்றார். இது சர்ச்சையானது.
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த இந்தப்பட பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, ‛‛மதுரை விழாவில், ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது என்று பாரதியாரின் கூற்றைத் தான் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் கூறிவில்லை. மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…