
அக்டோபர் 23ல் எத்தனை படங்கள் ரிலீஸ் ?
பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது ஒரு வாரம் முன்பும், ஒரு வாரம் பின்பும் வேறு புதிய படங்களை வெளியிடத் தயங்குவார்கள். அதிலும் "ஜெயிலர் 2" போல ஒரு படம் ஓடி வரும் போது வேறு படத்தைத் தியேட்டர்காரர்களும் திரையிட மாட்டார்கள்.
இருப்பினும் நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23ம் தேதி “டெலிவரி பாய், ஹைக்கூ, விடியும் காத்திரு" உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தார்கள். "ஜெயிலர் 2" படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் தங்களது "டெலிவரி பாய்" பட வெளியீட்டை நவம்பர் 27ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
அதனால், நாளை "ஹைக்கூ, விடியும் காத்திரு" ஆகிய படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. "ஹைக்கூ" படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியும் நேற்று நடந்துவிட்டது. எனவே, படம் நாளை கண்டிப்பாக வந்துவிடும். "விடியும் காத்திரு" படத்திற்கு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் நாளை (அக்.,23) மாலை 5 மணிக்கு டிரைலர் ரிலீஸ் செய்வதாக திடீரென அறிவித்துள்ளனர். டிரைலரே நாளைக்கு வெளியாக உள்ள நிலையில், படம் தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை. அதுதான் இன்றைய நிலவரம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!