
வீர தீர சூரன் ஓடிடி-யில் வரவேற்பு எப்படி?
ஏப் 25, 2025
Advertisement
விக்ரம் நடித்து அருண்குமார் இயக்கத்தில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லையென்றாலும் நல்ல படம் என்ற விமர்சனத்தையும், லாப கணக்கில் இந்த படமும் இடம் பிடித்தது. ஆரம்பத்தில் இந்த படத்தின் ஓடிடி உரிமையில் சில சிக்கல்கள் இருந்தது. அதற்கு பின் எல்லாம் ஒரு நிலைக்கு வந்த பிறகு இந்த வீர தீர சூரன் திரைப்படத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது. ஏப்ரல் 24 அன்று அதாவது நேற்று இந்த திரைப்படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் வெளியிட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த படத்தை அதிக பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்ததாக ஓடிடி தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம். இந்த படத்தை அமேசான் நிறுவனம் சுமார் 25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!