
எல்.ஜி.எம் - முதல்பாடலுக்கு வரவேற்பு எப்படி
ஜூன் 16, 2023
Advertisement
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனம் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் படமாக தயாராகி வரும் தமிழ் படம் "எல் ஜி எம்". ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று சமீபத்தில் இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சலானா என்கிற முதல் பாடல் நேற்று மாலை 7.00 மணிக்கு வெளியிட்டனர். ரமேஷ் தமிழ்மணியே இசையமைத்துள்ளார். மெலோடி காதல் பாடலாக வெளியாகி உள்ள இதை மதன் கார்கி எழுதி உள்ளார். ஆதித்யா பாடி உள்ளார். பாடல் வெளியான 21 மணிநேரத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!