ஹேஷ்டேக் விவகாரம் : ஓவியா பதிலடி
பிப் 21, 2021
Advertisement
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து "கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. நடிகை ஓவியாவும் மோடிக்கு எதிரான இந்த பதிவை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் அந்தப் பதிவைப் பகிர்ந்தனர். பலர் ஓவியாவை விமர்சித்தும், கண்டித்தும் பதிவுகளை வெளியிட்டனர்.
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளாரும், பாஜக நிர்வாகியுமான நடிகை காயத்ரி ரகுராமும் ஓவியாவைக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதோடு ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக சார்பில் சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஓவியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய்ஹிந்த் கருத்து சுதந்திரம் என பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!