ரஜினியை சந்தித்த மகிழ்ச்சியில்….
ஆக 26, 2026
Advertisement
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பல ரஜினி ரசிகர்களுக்கு நீண்டநாள் கனவாக இருக்கிறது. அதேபோல திரையுலகில் உள்ளவர்களுக்கும் கூட அவரை சந்திக்க வேண்டும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது ஆசை.
ரஜினியை திடீரென சந்தித்த மகிழ்ச்சியில் சில நடிகைகள் அடுத்தடுத்து புகைப்படங்களையும், அவரை சந்தித்தது பற்றியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
ரஜினியுடன் "சிவாஜி" படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயா, “ஒரு சாதனையாளரை சந்திக்கும் போது, புகைப்படம் எடுத்துக் கொள்வது அவசியம்தானே,” என்று பதிவிட்டுள்ளார்.
80களில் நடன நடிகையாக பிரபலமாக இருந்த டிஸ்கோ சாந்தி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே விமானத்தில் நமது ஒப்பற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. உங்களை நேசிக்கிறேன் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இளம் நடிகை கயாடு லோஹர், “நான் இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறேனோ என்று தோன்றுகிறது. அவருடைய தீவிர ரசிகையாக இருந்து, ஒரு விமானப் பயணத்தில் ரஜினிகாந்த் சாருக்கு மிக அருகில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. இது நடந்தது என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்த அந்தத் தருணத்தில், என் மனதில் "சுந்தரி" பாடல் ஒலிக்கத் தொடங்கியது, நான் அப்படியே ஒரு கனவுலகில் மிதக்கத் தொடங்கினேன்.
எவ்வளவு ஒரு அற்புதமான, எதிர்பாராத தருணம். என் நாளே இனிதாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல இருக்கிறேன்,” என நீண்ட பதிவு போட்டுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!