300 சென்டர்களில் 30வது நாளில் ஹனுமான்
பிப் 12, 2024
Advertisement
பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார் நடிக்க கடந்த மாதம் சங்கராந்தியை முன்னிட்டு வெளியான படம் "ஹனுமான்". தெலுங்கில் தயாரான இப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மகேஷ்பாபு நடித்து வெளிவந்த "குண்டூர் காரம்" படத்தைக் காட்டிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தெலுங்கு ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படம் வெளிவந்து 30 நாட்கள் ஆன நிலையில் 300 கோடி வசூலைக் கடந்து இன்னும் 300 சென்டர்களில் படம் ஓடுகிறது. இந்த 2024ம் ஆண்டில் இந்தியத் திரையுலகின் முதல் பெரும் வசூல் படமாக இந்தத் தெலுங்குப் படம் அமைந்துள்ளது.
2022ம் ஆண்டில் ஆன்மிகம் கலந்த படமாக வந்த கன்னடப் படமான "காந்தாரா" படம் 400 கோடி வசூலை அள்ளியது. தெலுங்கில் ஆன்மிகப் படமாக வந்த இந்த "ஹனுமான்" படம் தற்போது 300 கோடியைக் கடந்துள்ளது. வளரும் நடிகரான தேஜா சஜ்ஜா படத்திற்குக் கிடைத்த வரவேற்பு பல முன்னணி நடிகர்களை கொஞ்சம் பொறாமையிலும் தள்ளியிருக்கிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!