200 மில்லியன் சாதனைகளைக் கடந்த ஹனுமான்
மார் 24, 2024
Advertisement
தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் "ஹனுமான்". இப்படம் ஓடிடியில் வெளியான ஒரே நாளிலேயே 100 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. தற்போது 200 மில்லியன் பார்வைகளை ஐந்து தினங்களில் கடந்துள்ளது.
ஓடிடி தளத்தில் தெலுங்கு, மட்டும்தான் வெளியாகியுள்ளது. மற்ற மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமான பார்வைகளை ஓடிடி தளத்தில் பெற்றிருக்கலாம்.
சில தின இடைவெளியில் ஒவ்வொரு மொழியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் மற்ற மொழிகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!