
‛கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
செப் 23, 2023
Advertisement
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் தனுசுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், ஜி.வி .பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில், கேப்டன் மில்லர் படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அந்த பாடலின் இரண்டு வரிகளையும் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும்..."" என்று பதிவிட்டுள்ளார் ஜி. வி.பிரகாஷ். இந்த பாடலை கேபர் வாசுகி என்பவர் எழுதியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…