
தனுஷ் படத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரியங்கா மோகன்
மார் 15, 2024
தனுஷ் இயக்குனராக தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதுதவிர "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தனுஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சி இடம் பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!