
உறுதியாகிறது அ-அ-அ கூட்டணி
அட்லீயின் சம்பளம் 60 கோடி, அவரது குருநாதர் ஷங்கரை விடஅதிக சம்பளம் என்று சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அடுத்த புதிய தகவலாக படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளாராம். அவருக்கும் "ஜவான்" படத்தை விடவும் அதிக சம்பளம் என்கிறார்கள். ஏற்கனவே இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில் தற்போது பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் இந்த கூட்டணி அமைவது உறுதி தான் என்கிறார்கள்.
அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் என "அ-அ-அ" கூட்டணியாக பான் இந்தியா கூட்டணியாக உருவாக உள்ள இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனிருத் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் "தேவரா" படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதுவும் ஒரு பான் இந்தியா படம்தான்.
இந்தப் புதிய கூட்டணி அமைந்தால் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் பேசப்படலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!