
தனுஷ் ரசிகர்களை குஷி படுத்திய ஜி.வி.பிரகாஷ்
மே 02, 2023
Advertisement
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பக்கம் வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். மற்றொரு பக்கம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் அவரது டுவிட்டர் கணக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதன்படி, நடிகர் தனுஷ் உடன் தான் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இது வாத்தி படத்தின் இசையமைக்கும் நேரத்தில் எடுத்தது. அடுத்து கேப்டன் மில்லர் என்று கூறி தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ஜி.வி.பிரகாஷ். இதனால் விரைவில் கேப்டன் படத்தின் இசை சம்பந்தமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. குறிப்பாக முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சமூக வலைதளங்களில் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!