தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்!
ஜூலை 18, 2023
Advertisement
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம் "கேப்டன் மில்லர்". இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே ஜூலை மாதத்தில் டீசர் வெளியாகும் என்று அறிவித்தனர். இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜூலை 28ல் சம்பவம் இருக்கு... கில்லர் கில்லர்" என பதிவிட்டு தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!