
துரை செந்தில்குமார் இயக்கத்தில் விஷால் ?
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் பெற்ற கடனை சரி செய்வதற்காகத்தான் "மகுடம்" படத்தில் நடித்தாராம் விஷால். ஆனால், அந்த பழைய கடனுடன் சேர்ந்து "மகுடம்" படத்திற்காக ஏற்பட்ட புதிய கடனும் சேர்ந்து இப்போது "கடனுக்கு மேல் கடன்" ஆகிவிட்டதாம்.
அதனால், அடுத்த படத்தில் நடிக்கும் வேலையை மட்டும் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் விஷால். அவரது அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த "எதிர் நீச்சல்", தனுஷ் நடித்த "கொடி", சசிகுமார் நடித்த "கருடன்" லெஜண்ட் சரவணா நடித்த "லீடர்" ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார்.
இப்படத்தை முன்னணி தயாரிப்பாளரான லலித்குமார் தயாரிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அவரது தைரியத்தைப் பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!