
அடுத்த வெற்றிக்குத் தயாரான ஜிவி பிரகாஷ்குமார்
கடந்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி அவரது இசையில் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" மற்றும் "மகுடம்" ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியானது. இதில் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இன்று ஆகஸ்ட் 21ம் தேதி ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தெலுங்குப் படமான "இருமுடி" படம் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கான முதல் காட்சி வரவேற்பு அமோகமாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
இப்படத்தின் வரவேற்பு குறித்து அனிருத் ஸ்டைலில் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார் ஜிவி. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைக் கொண்டாடத் தயாராகிவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!