
‛குட் நைட் மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்
ஆக 25, 2023
Advertisement
நடிகர் மணிகண்டன் காலா, ஜெய் பீம், காதலும் கடந்து போகும், ஏலே ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த "குட் நைட்" படத்தின் மூலம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார். தற்போது அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் மணிகண்டன் ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை கவுரி ப்ரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தை அறிவித்ததை தொடர்ந்து சென்னை பகுதியைச் சுற்றி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படப்பிடிப்பு தளத்தில் உள்ள போட்டோக்களை படக்குழுவினர்கள் பகிர்ந்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…