
33 ஆண்டுக்கு மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன் : டிச., 11ல் ரிலீஸ்
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காலத்தால் அழியாத பாடல்கள், ஷங்கரின் தனித்துவமான இயக்க பாணி, மற்றும் அர்ஜுனின் சிறந்த நடிப்பு ஆகியவற்றால் படம் வெற்றி பெற்றது. இந்த பிரம்மாண்ட படத்தை ரீ ரீலிஸ் செய்கிறார்கள். 4கே அல்ட்ரா ஹெச்டி (4K Ultra HD) காட்சித்தரம் மற்றும் மேம்படுத்தப்பட் 7.1 சரவுண்ட் சவுண்ட் (7.1 suround sound) என நவீன தொழில்நுட்பத்துடன் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் திரைக்கு வருகிறது. கிரேஸ் பிலிம் மீடியா (Grace Film Media) பேனரின் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…