சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்த கவின்
மார் 16, 2024
Advertisement
நடிகர் கவின் தற்போது இளன் இயக்கத்தில் "ஸ்டார்" படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் "கிஸ்" என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இது அல்லாமல் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வந்தார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. 46 நாட்கள் இதுவரை இதன் படப்பிடிப்பு நடைபெற்றது என்கிறார்கள். மேலும், இதில் கதாநாயகியாக அக்ஷயா நடிக்கின்றார். ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது .

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!