கார்த்தியை இயக்க போகும் கவுதம் மேனன்
மார் 14, 2025
Advertisement
கார்த்தி நடிப்பில் கடைசியாக ‛மெய்யழகன்" படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அவருடன் அரவிந்த்சாமி நடிக்க, பிரேம் குமார் இயக்கினார். இந்த படத்திற்கு பின் தற்போது ‛வா வாத்தியாரே" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர சர்தார் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் கைதி 2 படமும் அவர் கைவசம் உள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு கதையை கார்த்தியிடம் சொல்லி உள்ளார். அந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதாம். இதனால் படம் அடுத்தக்கட்டம் நோக்கி நகர துவங்கி உள்ளது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை தான் கவுதம் மேனன் படமாக்க உள்ளாராம். வழக்கமான கவுதம் மேனன் ஸ்டைலில் ஆக் ஷன் படமாக இது உருவாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!