
அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா?
அதேபோல்தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "ரெட்ரோ" படத்திலும் கேங்ஸ்டராக நடித்திருக்கும் சூர்யா, ஒரு கட்டத்தில் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ முடிவெடுப்பாராம். ஆனால் அதற்கு முன்பு அவர் செய்த அத்தனை பிரச்னைகளும் ஒன்று சேர்ந்து அவரை துரத்த, மீண்டும் அவர் கேங்ஸ்டராகவே மாறுவது போன்ற கதையில் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ என்ற இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. என்றாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இந்த படங்கள் திரைக்கு வரும் போது தான் தெரியவரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!