
தாத்தா முத்துராமனின் பிறந்தநாள் : கவுதம் கார்த்திக் நெகிழ்ச்சி பதிவு
ஜூலை 04, 2023
Advertisement
நடிகர் முத்துராமன் கதாநாயகனாக மட்டுமின்றி எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களில் குணசித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவரது பேரனான நடிகர் கவுதம் கார்த்திக், நடிகர் சிவக்குமாருடன் முத்துராமன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில் ஒரு முறையாவது உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. நான் சினிமாவுக்கு வந்த பிறகு எல்லோரும் என்னிடம் சொல்லும் விஷயம், உங்கள் தாத்தா மிகவும் அன்பானவர் அழகான நடிகர் என்று தான் கூறுகிறார்கள். நீங்கள் இல்லாமல் உங்களது ஆசி இல்லாமல் நான் இங்கே இல்லை. லவ் யூ தாத்தா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார் கௌதம் கார்த்திக்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!